எரிசக்தி அமைச்சகம்
சௌபாக்யா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மின்வசதி
Posted On:
01 AUG 2024 2:10PM by PIB Chennai
கடந்த 2021-22 முதல் நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் வரை நாட்டில் மொத்தம் 53,39,416.78 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன் பிரதமரின் சௌபாக்யா திட்டத்தை மத்திய அரசு 2017 அக்டோபரில் தொடங்கியது. சௌபாக்யா திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் மின்சார வசதி இல்லாத விருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும், நகர்ப்புறங்களில் விருப்பமுள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. நாட்டில் மொத்தம் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், செளபாக்யா திட்ட நிதியுதவி இல்லாமலேயே தமிழ்நாட்டில் 2,170 வீடுகளுக்கும், புதுச்சேரியில் 912 வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சௌபாக்யா திட்டத்தின் விடுபட்ட மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சார வசதி வழங்குவதற்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றியமைக்கப்பட்ட பகிர்மானப் பிரிவு திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ஆதரவு அளித்து வருகிறது.
இது தவிர பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களும் (PVTG) ஆன்-கிரிட் மின்சார இணைப்புக்காக RDSS இன் கீழ் நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள்.
சௌபாக்யா திட்டத்தை செயல்படுத்தும்போது பின்வரும் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன
அணுக முடியாத & தொலைதூர பகுதிகளில் ஆங்காங்கே உள்ள வீடுகள்.
கடினமான & மலைப்பாங்கான நிலப்பரப்பு, மோசமான வானிலை, நதி, சதுப்பு நிலம், பனி சூழ்ந்த பகுதிகள்.
மோசமான தேவைக்கும் குறைவான மின் உள்கட்டமைப்பு.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்.
வனப்பகுதிகள் - அனுமதி தேவை.
உள்ளூர் அளவில் பொருட்கள் (மின்கம்பங்கள், பகிர்மான மின்மாற்றிகள், மீட்டர் போன்றவை) கிடைக்காமை.
பல்வேறு உரிமை சிக்கல்கள்.
மாற்றியமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தின் கீழ், பிரதமரின் ஜன்மன் திட்டத்தின்படி தமிழ்நாட்டில், 4,781 வீடுகளுக்கு கிரிட் இணைப்பு வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
***
MM/KPG/DL
(Release ID: 2040472)
Visitor Counter : 64