நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரியின் தரம் தொடர்பான தரவுத்தளத்தைப் பகிர்தல்
Posted On:
29 JUL 2024 4:15PM by PIB Chennai
வெவ்வேறு சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியின் தரம் நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பால் (சிசிஒ) தரப்படுத்தப்பட்டு, அந்தந்த நிலக்கரி நிறுவனங்களால் சுரங்கம் வாரியாக பொது வலைதளத்தில் வெளியிடப்படுகின்றன.
இந்தச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட நுகர்வோர், அங்கீகாரம் அளிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு சுயேட்சையான மூன்றாம் தரப்பு மாதிரி முகமை மூலம், அவர்களுக்கு அனுப்பப்பட்ட நிலக்கரின் தரத்தை கூடுதலாக பரிசோதித்து பார்க்க முடியும். நிலக்கரி மாதிரியை சோதித்து பார்க்கும் மூன்றாம் தரப்பு முகமைகள், முடிவுகளை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருடனும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முடிவுகளும் நுகர்வோர் மற்றும் விற்பனையாளரால் கேள்விக்கு உட்படுத்தப்படலாம் அத்தகைய நேரத்தில் தேசிய அங்கீகார வாரியத்தின் பரிசோதனை மற்றும் ஆய்வகத்தின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவு விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் வழங்கப்படும்.
தரம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1.நுகர்வோருக்காக எரிசக்தி நிதி கழக நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் வாயிலாக சுயேட்சையான மூன்றாம் தரப்பு முகமைகள் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.
2.நிலக்கரி நுகர்வோர் இந்த பட்டியலில் இருந்து மூன்றாம் தரப்பு சுயேட்சையான முகமைகளை தேர்வு செய்து கொள்ளமுடியும். அவை நிலக்கரி கடைசியாக வாகனத்தில் ஏற்றப்படும் போது அதில் இருந்து மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கும்.
3.நிலக்கரியின் பகுப்பாய்வுக்குப் பிறகு இந்த முகமைகளால் சமர்ப்பிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதன் தரவுகள் மையப்படுத்தப்பட்ட தளத்தில் பராமரிக்கப்படுகிறது.
iv. நுகர்வோர் சுதந்திரமான மூன்றாம் தரப்பு மாதிரியை தேர்வு செய்யாத சந்தர்ப்பங்களில், நிலக்கரி அனுப்பிவைக்கப்பட்ட பகுதியில் இருந்து நிலக்கரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நிலக்கரி கட்டுப்பாட்டு அதிகாரியால் அந்த நிலக்கரி தரப்படுத்தப்ட்டு அறிவிக்கப்படும்.
இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
****
(Release ID: 2040432)
Visitor Counter : 29