சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டினரின் பாதுகாப்பான பயணம்
Posted On:
29 JUL 2024 4:29PM by PIB Chennai
சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் பொறுப்பாகும். இருப்பினும், சுற்றுலாத்துறை அமைச்சகம் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் அர்ப் பணிப்புள்ள சுற்றுலா காவல்துறையை அமைப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
சுற்றுலா அமைச்சகத்தின் முயற்சிகளுடன், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் சுற்றுலா காவல்துறை பிரிவை, ஏதோ ஒரு வகையில் நிறுவியுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் பயணத்தைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுற்றுலா அமைச்சகம் 10 சர்வதேச மொழிகள் உட்பட 12 மொழிகளில் 1800111363 என்ற இலவச எண் அல்லது 1363 என்ற சுருக்கமான எண்ணில் 24 மணிநேரமும் பல மொழிகளில் (ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷியன், சீனம், ஜப்பானிய, கொரியன், அரபு), இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலா குறித்த தகவல்களையும் உதவிகளை பெற வசதிகளை செய்து தந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது, பயணம் தொடர்பான அடிப்படை சேவைகள் வழங்கப்படும். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த வழிகாட்டுதலையும் மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் வழங்கவேண்டும்.
சுற்றுலா அமைச்சகமானது செயல்பாட்டின் அடிப்படையில் ஹோட்டல்களை நட்சத்திர மதிப்பீட்டு முறையின் கீழ் வகைப்படுத்துவதோடு தன்னார்வத் திட்டத்தின் கீழ் ஹோட்டல் திட்டங்களை அங்கீகரிக்கிறது. சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி ஓட்டல்கள் பல்வேறு படி நிலைகள் படி தரம் பிரிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடமிருந்து பெற்ற தடையில்லாச் சான்றிதழ்கள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (பொருந்தக்கூடிய இடங்களில்), கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிலிருந்து செயல்பட ஒப்புதல் வழங்கப்படுகிறது.
*****
(Release ID: 2040431)
Visitor Counter : 35