பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படைகள் எதிர்கொள்ளும் மருத்துவ சவால்களை சமாளிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐடெக்ஸ்-சும் ஏஎஃப்எம்எஸ்-சும் கையெழுத்திட்டுள்ளன
Posted On:
30 JUL 2024 4:52PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை முன்முயற்சியான பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள்-பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பு (iDEX-DIO -ஐடெக்ஸ் - டியோ), மருத்துவ கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்காக ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்புடன் (AFMS-ஏஎஃப்எம்எஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உற்பத்திப் பிரிவின் கூடுதல் செயலாளரும் டியோ தலைமைச் செயல் அதிகாரியுமான திரு அனுராக் பாஜ்பாயும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங்கும் 30 ஜூலை 2024 அன்று புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.
புதிய மருத்துவ தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், அவற்றை ஆயுதப் படைகளில் சேர்ப்பதிலும் புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மருத்துவ தொழில்நுட்பங்களில் அதிநவீன முன்னேற்றங்களை வளர்ப்பதற்கு இரு நிறுவனங்களின் தனித்துவமான வலிமையையும் நிபுணத்துவத்தையும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தும்.
*****
(Release ID: 2040422)