சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அவசர சேவைகளுக்கான போக்குவரத்து மேலாண்மை குறித்த தேசியக் கொள்கை
Posted On:
01 AUG 2024 12:04PM by PIB Chennai
அவசர தேவை / அவசர சேவை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலான இடங்களில், எளிதில் கடந்து செல்லத் தேவையான போக்குவரத்து மேலாண்மை குறித்த அம்சங்கள், மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989, மோட்டார் வாகன ஒழுங்குமுறை விதி 2017 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், நகர்ப்புறத் திட்டமிடல், மாநில அதிகாரத்திற்குட்பட்ட விவகாரம் என கூறியுள்ளார்.
இதன்படி, ஒருவர் தமது வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும்போது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட அவசர சேவை வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும். அவ்வாறு வழிவிடாவிட்டால், 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிவப்பு நிற ஒளிரும் விளக்குகளையும், பிற அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணியில் ஈடுபடும் வாகனங்கள், சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை உள்ளிட்ட பல வண்ண விளக்குகளைப் பொருத்திச் செல்லவும், மோட்டார் வாகன விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039979
----
MM/KPG/KR
(Release ID: 2040407)
Visitor Counter : 48