எரிசக்தி அமைச்சகம்
நாட்டின் புனல் மின் வளம்
प्रविष्टि तिथि:
01 AUG 2024 2:06PM by PIB Chennai
ராட்லே ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் (RHPCL) மற்றும் ராஜஸ்தான் உர்ஜா விகாஸ், ஐடி சர்வீசஸ் நிறுவனம் இடையே மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் 40 வருட காலத்திற்கு ராட்லே நீர்மின் திட்டத்திலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் (PPA) 03.01.2024 அன்று கையெழுத்திடப்பட்டது.
புனல் மின்சார வளத்தைப் பயன்படுத்த மத்திய அரசு கீழ்க்காணும் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பெரும் நீர்மின் திட்டங்களை (25 மெகாவாட்டுக்கு மேற்பட்ட திறன்) புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களாக அறிவித்தல்.
சூரியசக்தி அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாட்டின் கீழ் ஒரு தனி நிறுவனமாக நீர் கொள்முதல் கடப்பாடு.
நீர்மின் கட்டணத்தை குறைப்பதற்கான கட்டண சீரமைப்பு நடவடிக்கைகள்.
வெள்ளத் தணிப்பு/சேமிப்பு நீர்மின் திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்ட ஆதரவு அளித்தல்.
சாலைகள் / பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை செயல்படுத்துவதற்கான செலவுக்கு பட்ஜெட் ஆதரவு அளித்தல்.
நாட்டில் நீரேற்று சேமிப்பு திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்கள் 10 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டன.
மாநிலங்களுக்கிடையேயான மின் தொடரமைப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் PSPகளுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்தல்.
விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை மத்திய மின்சார ஆணையம் குறைத்தல்.
2017-2023 காலகட்டத்தில் மத்திய மின்சார ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மறு மதிப்பீட்டு ஆய்வின்படி, நாட்டில் பயன்படுத்தக்கூடிய பெரிய நீர்மின் திறன் 1,33,410 மெகாவாட் ஆகும். மேலும், நீரேற்று மூலம் இயங்கும் நீர் இருப்பு திறன் 1,76,280 மெகாவாட் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 15,569 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 24 நீர்மின் திட்டங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 11,376 மெகாவாட் திறன் கொண்ட 17 நீர்மின் திட்டங்களும், 55,330 மெகாவாட் திறன் கொண்ட 38 மின் உற்பத்தி திட்டங்களும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நில அளவை மற்றும் ஆய்வில் உள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/KV/DL
(रिलीज़ आईडी: 2040374)
आगंतुक पटल : 97