கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கம்
Posted On:
01 AUG 2024 3:05PM by PIB Chennai
நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய பதிவுகளைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு 2007-ம் ஆண்டில் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசிய இயக்கத்தை, நிறுவியுள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட தரவு http://nmma.nic.in.என்ற தளத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள், கல்லூரிகள், ஆராய்ச்சியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாட்டின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய தரவுத்தளங்களை உருவாக்குவதே தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.
நினைவுசின்னங்கள் மற்றும் தொல்பொருட்களை ஆவணப்படுத்துவது குறித்த பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிலரங்குகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இது கர்நாடகாவின் பெங்களூருவில் தென் பிராந்தியத்திற்கான இதுபோன்ற ஒரு பயிலரங்கை நடத்தியது, இதில் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம் மற்றும் மாநில தொல்பொருள் துறைகளிலிருந்து 65 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், அரசு வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், ஆய்வகங்களுடனும் இணைந்து சமீபத்திய குறிப்பிட்ட ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைகளுக்கான புதுமையான நுட்பங்களை அணுகுகிறது. ஏற்கனவே வெனிஸ்சில் உள்ள கா ஃபோஸ்கரி பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள ஐ.சி.ஆர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுள
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
IR/RS/KR
(Release ID: 2040361)
Visitor Counter : 43