சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சுங்கச் சாவடிகளுக்கு இடையே உள்ள தூரம்

Posted On: 01 AUG 2024 12:03PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டணங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ன் படி தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய நெடுஞ்சாலையின் ஒரே பிரிவில், அதே திசையில் வேறு எந்த கட்டண வளாகமும் அறுபது கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்படக்கூடாது. அறுபது கிலோமீட்டருக்குள் மற்றொரு சுங்கச்சாவடியை அமைக்க வேண்டிய தேவை இருந்தால், அதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யலாம்.  மேலும் நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதைக்கான கட்டணம் வசூலிப்பதற்காக அத்தகைய சுங்கச்சாவடி மற்றொரு கட்டண வளாகத்திலிருந்து அறுபது கிலோமீட்டருக்குள் நிறுவப்படலாம். சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறுபது கிலோமீட்டர் தூர அளவுகோல் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008 க்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது. முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 1997 இல் அத்தகைய அளவுகோல் இல்லை.

மேலும், மூடப்பட்ட பயனர் கட்டண வசூல் முறையில், தேசிய நெடுஞ்சாலைகளில் எங்கு வேண்டுமானாலும் சுங்கக் கட்டண வளாகங்களை அமைக்கலாம்.

60 கி.மீ வரம்பிற்குள் செயல்படும் கட்டண வளாகங்களும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் மற்றும் சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

(Release ID: 2039977)

PKV/KV/KR

 

 

 

***

 



(Release ID: 2040093) Visitor Counter : 66