சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்

Posted On: 01 AUG 2024 12:04PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 781 கிமீ தொலைவிற்கு பசுமை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்  திட்டம்  தொடர்பாக இந்தியாவும் உலக வங்கியும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன்படி, திட்டத்திற்கான மொத்த செலவீனமான 1,288.24 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையில், (ரூ.7,662.47 கோடி) 500 மில்லியன் டாலர் தொகையை உலக வங்கி கடனுதவியாக வழங்க உள்ளது.

இந்தத் திட்டப்பணிகளை 2026 மே மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039979

***

MM/KPG/KR


(Release ID: 2040032) Visitor Counter : 91


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP