மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் 21-வது கால்நடை கணக்கெடுப்புக்கான மண்டலப் பயிற்சி

Posted On: 31 JUL 2024 5:53PM by PIB Chennai

மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், "ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு மென்பொருள் (செல்பேசி, இணையப் பயன்பாடு / தகவல் பலகை) மற்றும் உயிரினங்கள் குறித்த 21-வது கால்நடை கணக்கெடுப்பின் மண்டலப் பயிற்சியை" நடத்தியது.

2024 செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள 21-வது கால்நடை கணக்கெடுப்பை நடத்துவதற்கு புதிதாக தொடங்கப்பட்ட செல்பேசி, இணையப் பயன்பாடுகள் குறித்து இந்த மாநிலங்களின் மாநில/மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இன்று (31.07.2024) பயிலரங்கு நடைபெற்றது.

21-வது கால்நடை கணக்கெடுப்புக்கு காணொலிக் காட்சி மூலம் திருமதி அல்கா உபாத்யாயா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் தாக்கம், உலகளாவிய வர்த்தக அடிப்படையில் இந்தியாவின் நிலை குறித்த கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் கால்நடை துறை ஒரு முக்கிய பொருளாதாரத் தூணாகும். இது லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5% பங்களிப்பு செய்கிறது அத்தியாவசிய புரதங்களை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். மிகப்பெரிய கால்நடை எண்ணிக்கை (53.6 கோடி), பால் (1 வது) மற்றும் முட்டை (2 வது) உற்பத்தியில் உலகளாவிய தலைமையுடன், இத்துறை ஓர் அதிகார மையமாக உள்ளது. இருப்பினும், உற்பத்தித்திறன், உள்கட்டமைப்பு, சந்தை அணுகல் ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்வது தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பிரதேச அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திரு எம் எம் நாயக் இந்தப்  பயிலரங்கை தொடங்கி வைத்தார். மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையின் ஆலோசகர் (புள்ளியியல்) திரு ஜகத் ஹசாரிகா, இயக்குநர் திரு வி.பி.சிங், ஆந்திரப் பிரதேச அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இயக்குநர் டாக்டர் அமரேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை கணக்கெடுப்பை நடத்துவதற்காக மாவட்ட, மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வெற்றிகரமான பயிற்சி அளிக்கும் கூட்டு முயற்சியாக இது அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039752

**

SMB/RS/DL


(Release ID: 2039891) Visitor Counter : 47


Read this release in: English , Hindi , Hindi_MP , Telugu