ரெயில்வே அமைச்சகம்
கடந்த 2023-ம் ஆண்டில் பண்டிகை, விடுமுறை, கோடைகால சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது
Posted On:
31 JUL 2024 6:52PM by PIB Chennai
கடந்த 2023-ம் ஆண்டில் பண்டிகை, விடுமுறை, கோடைகால சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது. ஹோலிப் பண்டிகையின் போது 527 சிறப்பு ரயில்களும், கோடைகாலத்தின் போது 6,369 சிறப்பு ரயில்களும், சாத் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது 4,480 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. மிக உயர்ந்த தரத்துடன் குளிர்சாதன வசதியற்ற பெட்டிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் பொதுப் பெட்டி மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உட்பட குளிர்சாதன வசதியற்ற 10,000 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை ரயில்வே, தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த போது தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039800
***
IR/KPG/DL
(Release ID: 2039889)
Visitor Counter : 56