மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே சீரான பாடத்திட்டம் குறித்து விவாதம்

प्रविष्टि तिथि: 31 JUL 2024 7:23PM by PIB Chennai

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்பட்டதன் 4-ம் ஆண்டு விழா புதுதில்லியில் உள்ள மானெக்ஷா கலையரங்கில் இன்று (31.07.2024) கொண்டாடப்பட்டது.

மத்திய கல்வித்துறை இணையமைச்சர்கள் திரு ஜெயந்த் சௌத்ரி, டாக்டர் சுகந்த மஜூம்தார், உயர்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அகில இந்திய கல்வி மாநாடு என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில், அனைத்து கல்வி வாரியங்களின் பாடத்திட்டம் குறித்தும் ஒரே சீரான பாடத் திட்டம் குறித்தும் குழு விவாதங்கள் நடைபெற்றது. நாட்டில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களால் பின்பற்றப்படும் பாடங்களை ஒரே சீரானதாக்கி கல்வி தரத்தை நிலைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039841                

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2039888) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP