உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்

Posted On: 30 JUL 2024 4:26PM by PIB Chennai

இந்திய நியாய சட்டம் 2023, இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் 2023 ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டன.

சிறைச்சாலைகளில் அதிக நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்திய மக்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய சட்டங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு எளிதான அணுகல், ஆதரவு, திறமையான நீதி பரிபாலன முறை ஆகியவற்றை வழங்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவங்கள் குறித்து ஆன்-லைனில் புகார் செய்தல், குற்றம் நடந்த இடம் எந்த காவல் துறை சரகத்திற்குட்பட்டதாக இருந்தாலும், எந்த காவல் நிலையத்திலும் புகாரை பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கையில் இலவச நகலை மக்களுக்கு வழங்குதல், கைது பற்றிய தகவலை அறியும் உரிமை, கைது தகவலை வெளியிடுதல், தடயங்களை சேகரித்தல் மற்றும் வீடியோ படம் பிடித்தல், விரைவான புலன் விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மின்னணு அழைப்பானைகள், பெண் மாஜிஸ்திரேட்டின் வாக்குமூலங்கள், காவல் துறை அறிக்கை மற்றும் இதர வாகனங்களை வழங்குதல் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தச் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய்குமார் இத்தகவலைத் தெரிவித்தார்.

***


(Release ID: 2039860) Visitor Counter : 88