உள்துறை அமைச்சகம்
குழந்தை கடத்தல்
Posted On:
30 JUL 2024 4:28PM by PIB Chennai
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் தெரிவிக்கப்பட்ட குற்ற புள்ளிவிவரங்களைத் தொகுத்து அதன் வருடாந்திர வெளியீடான 'இந்தியாவில் குற்றம்' என்னும் அறிக்கையில் வெளியிடுகிறது. சமீபத்திய வெளியிடப்பட்ட அறிக்கை 2022 ஆம் ஆண்டுடையது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (18 வயதுக்கு குறைவானவர்கள்) குறித்த தரவுகள், எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு போக்கைக் காட்டவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்டோர் மீட்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:
S.No.
|
ஆண்டு
|
மீட்கப்பட்டவர்கள் (18 வயதுக்கு கீழ்)
|
1
|
2018
|
2484
|
2
|
2019
|
2746
|
3
|
2020
|
2151
|
4
|
2021
|
2691
|
5
|
2022
|
3098
|
'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் "மாநில-பட்டியல்" விஷயங்களாகும். குழந்தை கடத்தல் குற்றங்களைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வதற்கான பொறுப்பு முதன்மையாக அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் உள்ளது, அவை தற்போதுள்ள சட்டத்தின் விதிகளின் கீழ் அத்தகைய குற்றங்களைக் கையாள தகுதி வாய்ந்தவை.
இருப்பினும், குழந்தை கடத்தல் உள்ளிட்ட ஆட்கடத்தலை தடுப்பது மற்றும் எதிர்ப்பது குறித்த வழிகாட்டுதல்களை அவ்வப்போது வழங்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் வடிவில் வழங்குவதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகளை மேம்படுத்த / அமைக்க அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி அளித்துள்ளது. ஆட்கடத்தல் பிரச்சினையை விரிவாக எதிர்கொள்ளும் நோக்கில், மாநிலம் / யூனியன் பிரதேசங்கள் - மாநில தலைமையகம் அளவில், மாவட்ட அளவில் மற்றும் காவல் நிலைய அளவில் அனைத்து மட்டங்களிலும் நிறுவன அமைப்பை நிறுவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன
ஆட்கடத்தல் பிரச்சினையை கவனமாகவும், திறமையாகவும் கையாள்வதற்கான சமீபத்திய முயற்சிகள்/முன்னேற்றங்கள் குறித்து காவல்துறை மற்றும் சட்ட அதிகாரிகளுக்கு உணர்த்தும் நோக்கில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 'மாநில அளவிலான மாநாடுகள்' மற்றும் 'நீதித்துறை கருத்தரங்குகள்' நடத்துவதற்கும் அமைச்சகம் உதவி வருகிறது.
இது தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கவில்லை.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
***
PKV/RR/KR/DL
(Release ID: 2039858)
Visitor Counter : 42