மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டன்ட் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவுகளை மத்தியக் குடிமைப் பணித் தேர்வாணையம் அறிவித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2024 1:54PM by PIB Chennai
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டன்ட் (நிர்வாகம்) பதவிக்கான துறை ரீதியான போட்டித் தேர்வின் இறுதித் தேர்வு முடிவுகளை மத்தியக் குடிமைப் பணித் தேர்வாணையம் அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு 10.03.2024 அன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 24.07.2004 முதல் 26.7.2004 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
அதன் அடிப்படையில் பொதுப் பிரிவில் 20 பேரும், ஷெட்யூல்டு பிரிவைச் சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 24 பேர் இப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள் தேர்வு முடிவு அறிவித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் இடம் பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039524
----
IR/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2039852)
வருகையாளர் எண்ணிக்கை : 91