சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

प्रविष्टि तिथि: 31 JUL 2024 1:35PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்ட விரோத வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை அகற்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இத்தகைய ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலை சமாளிக்க, சாலைகளின் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப, புறவழிச்சாலைகள், உயர் மட்டச்சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருவதாகவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039502  

***

MM/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2039848) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP