சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்கள் நலன்
Posted On:
31 JUL 2024 3:07PM by PIB Chennai
மூத்த குடிமக்களின் நலனுக்காக மத்திய அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்க, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால், பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் 2007 இயற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகள் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கான விரிவான செயல் திட்டத்தையும் மாநில அரசுகள் உருவாக்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவ சேவை அளிப்பதற்காக அடல் வயோ அபி உதய் திட்டத்தின் கீழ் முதியோரை பாதுகாப்பவர்களுக்கான பயிற்சி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, நீதித்துறை வாயிலாகவும் முதியோர் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் திரு பி எல் வர்மா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039569
***
MM/AG/KR/DL
(Release ID: 2039845)