கூட்டுறவு அமைச்சகம்
உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய சேமிப்பு கிடங்குகள்
Posted On:
31 JUL 2024 3:22PM by PIB Chennai
நாட்டில் உணவு தானியங்கள் சேமிப்பு திறனில் நிலவிய பற்றாக்குறையை சரி செய்ய, கடந்த 31.05.2023 அன்று கூட்டுறவுத் துறை வாயிலாக உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அளவில் சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் மையங்கள், நியாய விலைக் கடை போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், இந்தத் திட்டத்தின் மூலம் கட்டப்படும் சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமிப்பதோடு, அடுத்த சாகுபடிக்கான நிதியுதவியை பெறவும், தாங்கள் விரும்பும் நேரத்தில் விளைபொருட்களை விற்பனை செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் தங்களது விளைபொருள் முழுவதையும் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திடமே குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வேளாண் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் பிற சேவைகளையும் பஞ்சாயத்து/கிராம அளவிலேயே பெறுவதற்கும் கூடுதல் வருவாய் ஆதாரத்தை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039582
***
MM/AG/KR/DL
(Release ID: 2039827)