திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் 4 கட்டங்களில் 1.48 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
31 JUL 2024 1:49PM by PIB Chennai
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் 4 கட்டங்களில் 1 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரத்து 506 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 1 கோடியே 15 லட்சத்து 88 ஆயிரத்து 354 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அமைச்சர், 2024 ஜூன் மாதத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, 14 லட்சத்து 51 ஆயிரத்து 636 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், 2-ம் கட்டத்தில் 91 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உட்பட 15 முதல் 59 வரையிலானவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது.
மக்கள், கல்வி நிறுவனத்தின் மூலம் 2018-19 முதல் 2024, ஜூன் வரையிலான காலத்தில் 26 லட்சத்து 38 ஆயிரத்து 28 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு 25 லட்சத்து 93 ஆயிரத்து 642 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கைவினைத் தொழில்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ், 2018 முதல் 2022 வரை 62 லட்சத்து 55 ஆயிரத்து 71 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு, 41 லட்சத்து 61 ஆயிரத்து 894 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ், 20218-19 முதல்2024, ஜூன் வரையிலான காலத்தில் 14 லட்சத்து 79 ஆயிரத்து 926 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039517
----------
SMB/RS/KR/DL
(Release ID: 2039812)
Visitor Counter : 25