நிலக்கரி அமைச்சகம்
சுரங்க நச்சுத் தண்ணீரை சுத்திகரித்தல்
Posted On:
31 JUL 2024 3:47PM by PIB Chennai
சுரங்கப் பணிகளின் போது, அங்குள்ள தண்ணீர் நச்சுத்தன்மை அடைவதால் அதனை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி.கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சுரங்கப் பணிகளின் போது, சுரங்கத் தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவது வழக்கம் என கூறியுள்ளார்.
இந்தத் தண்ணீரை சுத்திகரிக்க தண்ணீர் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிலக்கரி நிறுவனங்களால் எடுக்கப்பட்டு வருகின்றன. சுத்திகரிக்கப்படும் தண்ணீர் நச்சு நீங்கியதாக உள்ளதா என அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 18,513 லட்சம் கிலோ லிட்டர் சுரங்கத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039604
***
PKV/RR/KR/DL
(Release ID: 2039808)