நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரியின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2024 3:48PM by PIB Chennai

நிலக்கரியின் தரம் தொடர்பான நுகர்வோரின் கவலைகளை போக்கும் வகையில், மத்திய நிலக்கரி அமைச்சகம் 26.11.2015-ந் தேதி நிலையான இயக்க விதிமுறை ஒன்றை வெளியிட்டது. நிலக்கரியை ஏற்றும் போது அதன் தரத்தை உறுதி செய்ய மூன்றாவது தரப்பு மாதிரி பகுப்பாய்வை மேற்கொள்ள அந்த விதிமுறை வகை செய்கிறது. சுதந்திரமான மூன்றாவது தரப்பு மாதிரி முகமைகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றன. கோல் இந்தியா நிறுவனமும் இத்தகைய தரச் சோதனைகளை மூன்றாவது தரப்பு முகமைகள் மூலம் நடத்தி வருகின்றன.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

PKV/RR/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2039807) வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP