நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருகிறது

Posted On: 31 JUL 2024 3:49PM by PIB Chennai

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை. அதிகபட்சமாக கடந்த 2023-24-ம் நிதியாண்டில் 997.828 மில்லியன் டன் அளவுக்கு அகில இந்திய அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 261.001 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-20-ம் ஆண்டில் 730.874 மில்லியன டன் நிலக்கரி உற்பத்தியும், 248.537 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதியும் நடைபெற்றுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 716.083 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியும், 215.251 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி நடைபெற்றுள்ளது.

2021-22-ம் ஆண்டில் 778.210 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியும், 208.627 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியும் நடைபெற்றுள்ளது.  2022-23-ம் ஆண்டு 893.191 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியும், 237.668 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதியும் நடைபெற்றுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039610

 

*****


IR/KPG/KR /DL


(Release ID: 2039802)
Read this release in: English , Hindi , Hindi_MP , Telugu