மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் ஊக்குவிப்பு

Posted On: 31 JUL 2024 4:26PM by PIB Chennai

நாட்டில் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்து மூலம்  பதிலளித்துள்ள அவர், இந்தத் திட்டத்தின்  ஒரு பகுதியாக நாட்டின் 65 இடங்களில் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பது, 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு ஈர்ப்பு, சிறிய நகரங்களில் பிபிஓ ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 52 மையங்கள் வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

நாஸ்காம் அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி இந்தியாவில் தொழில்நுட்ப தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் 2023-24  நிதியாண்டில் 254 பில்லியன் டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஏற்றுமதி மூலம் மட்டும் 200 பில்லியன் டாலர் கிடைக்கும் என்றும்  திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039641           

***

MM/AG/KR/DL



(Release ID: 2039793) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP