மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இறால்மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2024 4:40PM by PIB Chennai
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மீன் வளர்ப்புத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீன்வளர்ப்புத் தொழிலை மேம்படுத்த ஊக்குவித்து வருகிறது.
1381 ஹெக்டேர் நிலப்பரப்பில் உவர்நீர்க் குட்டைகள் அமைத்தல், 20 இறால் வளர்ப்புப் பண்ணைகள் அமைத்தல் உள்ளிட்ட ரூ.179.50 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,544 மீன்வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 407 மீன்வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-2021-ம் ஆண்டில் உவர் நீரில் 8.42 லட்சம் டன் அளவிற்கு இறால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2022-23-ம் ஆண்டில் அதன் உற்பத்தி 11.84 லட்சம் டன்னாக அதிகரித்தது. உவர் நீர் மீன்வளர்ப்பு முறை, கடல் உணவுத் தொழில்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020-2021-ம் ஆண்டில் ரூ.43,721 கோடி அளவிற்கு கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2022-23-ம் ஆண்டில் ரூ.63,969 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039659
***
IR/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2039784)
வருகையாளர் எண்ணிக்கை : 71