மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேச அரசின் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான திறன் கட்டமைப்பு பயிலரங்கு

Posted On: 31 JUL 2024 4:19PM by PIB Chennai

மத்தியப்பிரதேச அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 32  முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 62 பங்கேற்பாளர்களுடன் திறன் கட்டமைப்பு பயிலரங்கு இம்மாநிலத்தின் போபாலில் நடைபெறுகிறது. நேற்று (ஜூலை,30) தொடங்கிய இந்த 3 நாள் பயிலரங்கை நாளை (ஆகஸ்ட்,1) நிறைவடைகிறது.

மத்தியப்பிரதேச அரசின் உள்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்னணு நிர்வாக பிரிவால்   இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.

இந்தப் பயிலரங்கில், சைபர் பாதுகாப்பு, முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்புகள், அரசின்  உறுதிப்பாடு ஆகியவற்றில் தமது கருத்துகளை முதன்மை செயலாளர் திரு நிகுஞ் ஸ்ரீ வஸ்தவா பகிர்ந்துகொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039635

***

SMB/RS/KR


(Release ID: 2039767) Visitor Counter : 52