மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியா

प्रविष्टि तिथि: 31 JUL 2024 5:25PM by PIB Chennai

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடம் வகிப்பதாக மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  பதிலளித்துள்ள அவர், உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா 25 சதவீத பங்களிப்பை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் பால் உற்பத்தி அளவு ஆண்டுக்கு 6 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், ஒரு நாளைக்கு, ஒரு நபருக்கு 459 கிராம் வீதம் பால் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டு தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளதாகவும் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039705              

***

MM/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2039762) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Telugu