சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
31 JUL 2024 1:43PM by PIB Chennai
நாட்டில் 30.06.2024 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 983 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 67 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகள் 457 புதிய சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் 1,124.19 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039519
----
IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2039671)
आगंतुक पटल : 148