சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிராந்திய இணைப்பு வசதி

प्रविष्टि तिथि: 31 JUL 2024 1:34PM by PIB Chennai

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 1.6 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் தற்போது 1,46,126 கி.மீ்.யாக உள்ளது என்று  கூறியுள்ளார். இதுவரை உள்ள ஆவணங்களின்படி நாட்டில் உள்ள 784 மாவட்ட தலைநகரங்களில் 746 நகரங்களில் இருந்து சுமார் 10 கி.மீ. சென்றாலே தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2,84,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம்  தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் கணிசமாக உயர்த்தப்படும் என்றும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

4 வழி மற்றும் அதற்கு மேற்பட்ட வழித்தடங்களைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039501  

***

MM/AG/KR


(रिलीज़ आईडी: 2039663) आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP