சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லி-மும்பை விரைவுச்சாலை
प्रविष्टि तिथि:
31 JUL 2024 1:37PM by PIB Chennai
தில்லி – மும்பை இடையேயான விரைவுச் சாலைப் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. மொத்தம் உள்ள 1386 கிலோமீட்டர் தொலைவிலான சாலையில், 2024 ஜூன் மாதம் வரை 1,136 கிமீ தொலைவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது 82 சதவீதம் அளவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகள் 2025 அக்டோபர் மாதம் நிடைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய பொருளாதார மையங்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால், தில்லியிலிருந்து ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையே 180 கிலோமீட்டர் தூரத்தைக் குறைப்பதுடன் சுமார் 50 சதவீதம் பயண நேரமும் குறையும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
(Release ID 2039504)
IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2039646)
आगंतुक पटल : 76