விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு

Posted On: 30 JUL 2024 6:25PM by PIB Chennai

கடந்த பத்து ஆண்டுகளில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி முறையே 43 சதவீதமும் 44 சதவீதமும் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை ஊக்குவிக்க மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் பருப்பு வகைகள் திட்டத்தின் கீழ்ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட பண்ணைக் கருவிகள், இயந்திரங்கள், நீர் சேமிப்பு சாதனங்கள், பயிர் பருவத்தில் பயிற்சிகள் மூலம் விவசாயிகளின் திறன் மேம்பாடு போன்றவற்றுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு மூன்று பரந்த திட்டங்களுக்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

 

 

நாட்டில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்) இப்பயிர்கள் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளையும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்முறை ஆராய்ச்சியையும் மேற்கொள்கிறது.

மேலும், அறிவிக்கை செய்யப்பட்ட எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கொப்பரை விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான திட்டஙகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

***

 


(Release ID: 2039573)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP