மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை வளர்ப்போருக்கு உதவும் முக்கிய திட்டம்

प्रविष्टि तिथि: 31 JUL 2024 1:07PM by PIB Chennai

சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் துறை அமைச்சர் திரு பூரன் கே.குருங் காங்டாக்கில் உள்ள சிந்தன் பவனில் நேற்று 'ஏ-ஹெல்ப்' (சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி விரிவாக்கத்திற்கான அங்கீகாரம் பெற்ற முகவர்) என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சித் துறை ஆலோசகர் திருமதி கலா ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

திரு குருங் தனது உரையின் போது, கால்நடை விவசாயிகளுக்கும் துறைக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பை இந்தத் திட்டம் உருவாக்கும் என்று குறிப்பிட்டார். கால்நடை சுகாதாரம், விரிவாக்க சேவைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், இது கால்நடை உற்பத்தித்திறன் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் கூறினார். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா காணொலி மூலம் கூட்டத்தில் உரையாற்றினார்,

 

மத்திய அரசின் வேளாண்மை வளர்ச்சித் துறையின் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதுமையான விரிவாக்க முயற்சியே இந்தத் திட்டம் ஆகும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சுய உதவிக் குழுக்களின் சேவைகளை கால்நடை பராமரிப்புப் பணிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. பீகார், குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், மிசோரம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் முற்போக்கு விவசாயிகள் மற்றும் பசு சகிஸ் உட்பட 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

***

(Release ID: 2039478)

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2039523) आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Nepali , हिन्दी , Hindi_MP , Telugu