கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒற்றை தேசிய மென்பொருள் வலையமைப்பு

Posted On: 30 JUL 2024 4:36PM by PIB Chennai

ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆரம்ப வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களைக் கணினிமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, அனைத்து சங்கங்களையும் இ.ஆர்.பி (நிறுவன வள திட்டமிடல்) அடிப்படையிலான பொதுவான தேசிய மென்பொருளின் கீழ் கொண்டு வந்து, அவற்றை மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்திற்கான தேசிய அளவிலான பொது மென்பொருள் நபார்டு வங்கியால் உருவாக்கப்பட்டு, 21.07.2024 நிலவரப்படி 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 25,904 ஆரம்ப வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் இ.ஆர்.பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கங்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும், பஞ்சாயத்து மட்டத்தில்  அவற்றை துடிப்பான பொருளாதார நிறுவனங்களாக மாற்றுவதற்கு  அவற்றின் வணிக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்துவதற்கும்ஆரம்ப வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களுக்கான மாதிரி துணை விதிகள் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர் அரசால் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாநில கூட்டுறவு சட்டங்களின்படி பொருத்தமான மாற்றங்களைச் செய்த பின்னர், ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் ஜனவரி 5,2023 அன்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பால்பண்ணை, மீன் வளர்ப்பு, மலர் சாகுபடி, கிடங்குகள் அமைத்தல், உணவு தானியங்கள், உரங்கள், விதைகள் கொள்முதல், சமையல் எரிவாயு / சி.என்.ஜி / பெட்ரோல்/டீசல் விநியோகம், குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன், தனிப்பயன் வாடகை மையங்கள், பொது சேவை மையங்கள், நியாய விலைக் கடைகள், சமூக நீர்ப்பாசனம், வணிக தொடர்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  கூட்டுறவு சங்கங்கள்  தனது வணிக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்தும்.

இதுவரை, 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 67,009  ஆரம்ப வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களை  கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்காக ரூ.654.23 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039074

 

 

 

***


(Release ID: 2039462) Visitor Counter : 55