பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

கிராம வரைபட செயலி

Posted On: 30 JUL 2024 4:43PM by PIB Chennai

கிராம பஞ்சாயத்தின் இடஞ்சார்ந்த திட்டமிடலை ஊக்குவிப்பதற்காக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்) "கிராம மஞ்சித்ரா" செயலியை (https://grammanchitra.gov.in

)அறிமுகப்படுத்தியது. இந்த செயலி புவி-இடஞ்சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்து மட்டத்தில் திட்டமிடலை மேற்கொள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவுகிறது. இது பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக காட்சிப்படுத்த ஒற்றை / ஒருங்கிணைந்த புவிசார் இடஞ்சார்ந்த தளத்தை வழங்குகிறது மற்றும் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்திற்கு (ஜி.பி.டி.பி) முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பை வழங்குகிறது.

மேலும், சொத்துக்கள் சம்பந்தமான பணிகளுக்கு ஜியோ டேக்குகள் மூலம் புகைப்படங்களை எடுக்க உதவும்  செல்பேசி அடிப்படையிலான தீர்வான எம் ஆக்ஷன் சாஃப்ட்-ஐ அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பணி தொடங்குவதற்கு முன், வேலையின் போது மற்றும் வேலை முடிந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளிலும் சொத்துகளுக்கு ஜியோ டேக்கிங்  செய்யப்படுகிறது. இது இயற்கை வள மேலாண்மை, நீர் சேகரிப்பு, வறட்சியைத் தாங்குதல், சுகாதாரம், வேளாண்மை, தடுப்பணைகள் மற்றும் பாசனக் கால்வாய்கள் போன்றவற்றின் அனைத்து பணிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல் களஞ்சியத்தை அளிக்கும்.  இந்த தொழில்நுட்பம் மூலம்ஜியோடேக் செய்யப்பட்ட சொத்துக்கள் கிராம  வரைபட செயலியில்  இடம்பெறுகின்றன, இது கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் காட்சிப்படுத்தலை மேம்படுத்துகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பஞ்சாயத்துகளை மேலும் வெளிப்படையானதாகவும், பொறுப்புணர்வு மிக்கதாகவும், உள்ளாட்சி அமைப்புகளாக திறம்பட செயல்பட வைப்பதை நோக்கமாகக் கொண்டு அமைச்சகம் மின்னணு-பஞ்சாயத்து இயக்க முறை திட்டத்தை (எம்.எம்.பி) செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் பஞ்சாயத்துகளுக்கான பணி அடிப்படையில் விரிவான இ-கிராமஸ்வராஜ் செயலியை அமைச்சகம் ஏப்ரல் 24, 2020 அன்று அறிமுகப்படுத்தியது. இச்செயலி ஊராட்சிகளின் செயல்பாடுகளான திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், கணக்கியல், கண்காணிப்பு, சொத்து மேலாண்மை போன்ற அனைத்து அம்சங்களையும் இணையதளம் மூலம் பணம் செலுத்துதல் உட்பட ஒரே டிஜிட்டல் தளத்தில் உள்ளடக்கியுள்ளது. இதுவரை, 2.44 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை தயாரித்து பதிவேற்றம் செய்துள்ளன. மேலும், 2024-25-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு மானியத்திற்கான  இணைய வழி பரிவர்த்தனைகளை 2.06 லட்சம் ஊராட்சிகள் ஏற்கனவே முடித்துள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039084

 

 

 

***



(Release ID: 2039457) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP