விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருப்பு வகைகள் உற்பத்தியும் இறக்குமதியும்

Posted On: 30 JUL 2024 6:32PM by PIB Chennai

2015-16-ம் ஆண்டில் 163.23 லட்சம் டன்னாக இருந்த பருப்பு வகைகளின் அகில இந்திய உற்பத்தி 2023-24-ம் ஆண்டில் 244.93 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பருப்பு வகைகள் ஏற்றுமதி - இறக்குமதி விவரம் வருமாறு:

*2021-22 -ம் ஆண்டில் இறக்குமதி 26.99 லட்சம் டன்னாகவும் ஏற்றுமதி 3.87 லட்சம் டன்னாகவும் இருந்தது.

*2022-23-ம் ஆண்டில் இறக்குமதி 24.96 லட்சம் டன்னாகவும் ஏற்றுமதி 7.62 லட்சம் டன்னாகவும் இருந்தது.

*2023-24 ம் ஆண்டில் இறக்குமதி 47.38 லட்சம் டன்னாகவும் ஏற்றுமதி 5.94 லட்சம் டன்னாகவும் இருந்தது.

அறிவிக்கை செய்யப்பட்ட எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கொப்பரைகளை கொள்முதல் செய்வதற்காக பிரதமரின் அன்னதாதா அய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA) என்ற திட்டத்தின் கீழ் விலை ஆதரவு திட்டத்தை வேளாண்மை துறை செயல்படுத்தி வருகிறது. துவரம் பருப்பு போன்றவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 2023-24, 2024-25-ம் ஆண்டுகளுக்கான உண்மையான உற்பத்தியில் 25% கொள்முதல் வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வேளாண்துறை 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

***


(Release ID: 2039400) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP