விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையில் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பு
प्रविष्टि तिथि:
30 JUL 2024 6:33PM by PIB Chennai
வேளாண், விவசாயிகள் நலத்துறை 2018-19-ம் ஆண்டு முதல் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா எனப்படும் தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய கண்டுபிடிப்புகளில் வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "புதுமையான வேளாண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 5 அறிவுசார் பங்குதாரர்கள், 24 வேளாண் வணிக தொழில் பாதுகாப்பகத்தினர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. வேளாண், அது சார்ந்த துறைகளில் தொழில் முனைவோரும் புத்தொழில் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள், சேவைகள், வர்த்தக தளங்கள் போன்றவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தவும், அவர்கள் படிப்படியாக முன்னேறவும் இது உதவுகிறது.
இத் திட்டத்தின் கீழ் 2019-20 ம் ஆண்டு முதல் 2023-24ம் ஆண்டு வரை மொத்தம் 1708 வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.122.50 கோடிநிதி உதவி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(रिलीज़ आईडी: 2039398)
आगंतुक पटल : 112