கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
முக்கிய துறைமுகங்களின் மொத்த திறன் 87.01% அதிகரித்துள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
Posted On:
30 JUL 2024 6:39PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், நாடாளுமன்றத்தில், கடல்சார் துறை தொடர்பாக விரிவான தகவல்களை வழங்கினார். அவரது விரிவான பதில்கள் கொள்கலன் பற்றாக்குறை, துறைமுக திறன் விரிவாக்கம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்தன.
சரக்குப் பெட்டக பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், சரக்குப் பெட்டகங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றார்.
கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு நீண்டகால தீர்வாக இந்திய நிறுவனங்களின் கொள்கலன்களின் உரிமையையும் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் துறைமுகங்களின் திறனை விரிவுபடுத்துவது தொடர்பான கேள்விகளுக்கும் திரு சர்பானந்த சோனோவால் பதிலளித்தார். 2014-15-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் துறைமுகங்களின் திறன் விரிவாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் அதன் திறனை 31.29% அதிகரித்துள்ளது என்றும் பாரதீப் துறைமுகம் 141.86% -மும் திறனை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். காமராஜர் துறைமுகமும் வ.உ.சிதம்பரனார் துறைமுகமும் முறையே 154.05%, 150.19% திறன் விரிவாக்கங்களை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சென்னை, கொச்சின், மங்களூர் போன்ற பிற துறைமுகங்களும் குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன என அவர் தெரிவித்தார். குஜராத்தின் தீன்தயாள் துறைமுகம், கடந்த பத்தாண்டுகளில் 121.79% திறன் அதிகரிப்புடன் தனித்து நிற்கிறது என அவர் கூறினார். ஒட்டுமொத்தமாக, இந்த துறைமுகங்களின் மொத்த திறன் 87.01% அதிகரித்துள்ளது என அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
***
(Release ID: 2039397)
Visitor Counter : 42