மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அகில இந்திய கல்வி மாநாட்டில், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தரவரிசை, அங்கீகாரம் போன்றவை குறித்துக் குழு விவாதங்கள் நடைபெற்றன
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2024 6:41PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 4 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கல்வி அமைச்சகம் 29 ஜூலை 2024 அன்று புதுதில்லியில் அகில இந்திய கல்வி மாநாட்டை நடத்தியது. மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உயர்கல்வித் துறைச் செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆறு குழு விவாதங்கள் நடைபெற்றன. அவற்றில் மூன்று பள்ளிக் கல்வி குறித்தும், மூன்று உயர்கல்வி குறித்தும் நடைபெற்றன.
உயர்கல்வி குறித்த குழு விவாதங்களில் ஒன்று தரவரிசையையும் அங்கீகாரத்தையும் மையமாகக் கொண்டது.
இந்த விவாதங்கள், கலந்துரையாடல்களின் போது, புதிய தேசிய கல்விக் கொள்கை, பின்தங்கிய சமூகங்களின் தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (GER) 2030 ம் ஆண்டுக்குள் 50%-க்கும் அதிகமாக அடைவதே இலக்கு என்பது இதில் விளக்கப்பட்டது.
மொத்த சேர்க்கை விகிதத்தை (ஜிஇஆர்) அதிகரிக்க உயர்கல்வி மாணவர்களின் பெற்றோருடன் தொடர்புகொள்வது போன்ற பரிந்துரைகளை பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 2039393)
வருகையாளர் எண்ணிக்கை : 87