வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே ஆண்டில் 1,03,057 பொருட்களுக்கு காப்புரிமை

प्रविष्टि तिथि: 30 JUL 2024 5:06PM by PIB Chennai

இந்திய  காப்புரிமை அலுவலகம் கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் 1,03,057 பொருட்களுக்கு காப்புரிமை வழங்கியிருப்பதாக மத்திய வர்த்த்க தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் அறிவுசார்  சொத்துரிமை சூழலை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

தகவல்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களை நவீனமயமாக்குதல் ஆவணங்களை கணினி மயமாக்குதல், கட்டணச் சலுகை, விழிப்புணர்வு நடவடிக்கை,  அதிகபட்ச அறிவுசார் சொத்துரிமை வைத்திருப்பவர்களை கவுரவித்தல், புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு உதவி, திறன் உருவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039118

-----

MM/KPG/DL


(रिलीज़ आईडी: 2039269) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP