கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
என்.டி.சி.பி.டபிள்யூ.சி மூலம் கடல்சார் ஆராய்ச்சி
Posted On:
30 JUL 2024 2:15PM by PIB Chennai
360 டிகிரி இணைப்புப் பால சிமுலேட்டர், கள ஆராய்ச்சி ஆய்வகம் கணக்கீட்டு வசதி மற்றும் துறைமுக மைய கட்டிடம் வண்டல் படிதல், அரிப்பு மேலாண்மை சோதனை வடிநிலம், அலை வடிநிலம் ஆகியவை துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தில் (NTCPWC) அமைக்கப்பட்டுள்ளன. 35 க்கும் மேற்பட்ட வழிகாட்டல் ஆய்வுகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாதிரிக் கட்டுமானம் மற்றும் பெரும் முடிவெடுக்கத்தக்க சோதனைப் படுகை வாயிலாக, ஆழப்படுத்துதல், படிமங்களை தூர்வாறுதல் மேலாண்மை மற்றும் கடல் அரிப்பு போன்றவற்றுக்கு ஈடுகொடுக்க, துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோரப் பகுதிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு தீர்வு காண, துறைமுக மைய வடிநிலத்தின் ஒரு பகுதியாக, வண்டல் படிதல் மற்றும் அரிப்பு மேலாண்மை சோதனை வடிநில, அலை வடிநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், சுய கடற்பயணம் மற்றும் அறிவார்ந்த தடை தவிர்ப்பு மூலம், நீரியல் மற்றும் கடலியல் ஆய்வுகளை தாமாக மேற்கொள்ள ஆளில்லா மேற்பரப்புக் கலனும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை நடைமுறை ஒன்றும், டிஜிட்டல் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டிருப்பது, ஆண்டு பராமரிப்புக் கட்டணத்தை 20 சதவீதத்திற்கு மேல் குறைப்பதுடன், துறைமுகங்களில் ஏற்படும் பிற செலவுகளையும் கணிசமாகக் குறைக்கும்.
துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோரப்பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் (என்டிசிபிடபிள்யூசி) அமைக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றுவரை, காப்புரிமை மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும் 10-க்கும் மேற்பட்ட புதுமையான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், துறைமுகங்கள், நீர்வழிகள், கடல்சார் தொழில் துறைகளில் திறன் மேம்பாடு, வழிகாட்டல் பயிற்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஆய்வகங்களை அமைப்பது, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை, கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுடனான கலந்துரையாடலையும் ஊக்குவிக்கும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
---
MM/KPG/KR/DL
(Release ID: 2039263)
Visitor Counter : 36