கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருச்சி பெல் தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted On: 30 JUL 2024 3:53PM by PIB Chennai

திருச்சி பெல் தொழிற்சாலை உட்பட நாட்டில் உள்ள  மூலதன சரக்குத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்திய மூலதன சரக்குத் தொழில்துறையில் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்காக நாட்டில் உள்ள 5 பெரும் தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை கனரக தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இதன்படி, தமிழ்நாட்டில், திருச்சியில் பெல் எனப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தின் வெல்டிங் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனத்தில் அதநவீன வெல்டிங்  தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக ரூ.87.06 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி மற்றும் ஜான்சி, உத்தராகண்டில் ஹரித்துவார், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனத்தின் விரிவாக்க மையங்களிலும் இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புனேயில் உள்ள சி4ஐ4 ஆய்வகம், புதுதில்லியில் உள்ள வாகனத் திறன் மேம்பாட்டுக் கவுன்சில் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும், இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதாக அமைச்சர் திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039007 

***

MM/KPG/KR/DL


(Release ID: 2039158) Visitor Counter : 56
Read this release in: English , Hindi , Hindi_MP