கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர்வழிகள் மூலம் சரக்குப் போக்குவரத்து

प्रविष्टि तिथि: 30 JUL 2024 2:07PM by PIB Chennai

தேசிய நீர்வழிகள் மூலம் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கேரளா, ஆந்திரா, ஒடிசா, கோவா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களில் 14 புதிய தேசிய நீர்வழிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பயன்படக் கூடிய நீர்வழிகளை உருவாக்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய நீர்வழிகளை போக்குவரத்துக்கான மாற்று வழிகளாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கான மாற்று வழியாக பயன்படும் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு கொண்டுள்ளது.

போக்குவரத்துக்கும் மட்டுமில்லாமல், சரக்குப் போக்குவரத்துக்கும் நீர்வழிகளை பயன்படுத்தும் வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

உள்நாட்டு நீர்வழிகளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

பிரம்மபுத்திராவில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த அசாம் சுற்றுலா துறை, சாகர்மாலா, ஐடபிள்யுடி, ஐடபிள்யுஏஐ ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இதே போல பீகார் மாநிலமும் நீர்வழிகளை பயன்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038949

 

 

******

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2039054) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Hindi_MP , Manipuri