பாதுகாப்பு அமைச்சகம்

ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ சிகரத்தில் இந்திய கொடியை ஏற்ற மாற்றுத்திறனாளிகளின் முதல் பயணம்

Posted On: 30 JUL 2024 2:48PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறும் நிறுவனம், கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவிலிருந்து ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மலைக்கு 2024 ஆகஸ்ட் 02 முதல் 20 வரை மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பயணத்தை புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி தீப்தி மோஹில் சாவியா 30 ஜூலை 2024 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மலையேற்றக் குழுவில்  முழங்காலுக்கு மேல் 91% ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான திரு உதய் குமார், விமானப்படை வீரரும், குரூப் கேப்டனுமான ஜெய் கிஷன், கேப்டன் ஸ்ருதி எஸ்.சானவீரகவுத்ரா,  மகேந்திர குமார் யாதவ், திரு பாவெல் சர்மா, செல்வி சுலக்ஷனா தமாங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கு சிக்கிமில் உள்ள கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவில் உள்ள ரிதெனோக் மலையில் (16,500 அடி) திரு. உதய் குமார் ஏற்கனவே ஏறி, வரவிருக்கும் சவால்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணத்தை அமைத்துள்ளார்.

78-வது சுதந்திரதினத்தை நினைவுகூரும் வகையில், 7,800 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி பறக்கவிடப்பட உள்ளது. ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவில் மிகப்பெரிய இந்திய கொடியை ஏற்றிய மாற்றுத்திறனாளிகளின் முதலாவது பயணம் என்ற வரலாற்றை இந்த பயணக் குழு உருவாக்கும். இந்தப் பயணம் இந்திய மக்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சான்றாகும். இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், அடித்தட்டு மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்

***

Release ID: 2038963)

SMB/RS/KR



(Release ID: 2039051) Visitor Counter : 42


Read this release in: English , Urdu , Hindi , Hindi