மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சத்தீ பயிற்சி இணையதளம்
Posted On:
29 JUL 2024 6:01PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட், எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தரமான கல்விக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்காக, உயர்கல்வித் துறை, கான்பூர் ஐஐடி-யுடன் இணைந்து சத்தீ - SATHEE (சுய மதிப்பீடு, சோதனை, நுழைவுத் தேர்வுக்கான உதவி - Self-Assessment, Test and Help for Entrance Examination) என்ற தளத்தை நவம்பர் 2023-ல் தொடங்கியது.
இந்த தளம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினர் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கான கல்வி உள்ளடக்கத்தையும் வழிகாட்டுதலையும் இலவசமாக வழங்குகிறது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களின் கல்வியாளர்களால் இந்த உள்ளடக்கம் நிர்வகிக்கப்படுகிறது. மாணவர்கள், தேர்வு எழுதுவோர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவ தங்கள் நிபுணத்துவத்தை அவர்கள் வழங்குகின்றனர். இதுவரை, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கற்போர் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த தளம், 60,000 க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கொண்ட மதிப்பீட்டு தளம், என்சிஇஆர்டி வீடியோ தீர்வுகள், நேரடி வகுப்புகள் போன்ற வசதிகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
(Release ID: 2038629)
***
(Release ID: 2038981)
Visitor Counter : 42