தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமாதான் இணையதளம்

Posted On: 29 JUL 2024 6:58PM by PIB Chennai

தொழில் தகராறுகள் சட்டம் - 1947-ன் கீழ் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பு அளிப்பவர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோர் தொழில் தகராறுகளைத் தாக்கல் செய்ய வசதியாக சமாதான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பணிக்கொடை வழங்கல் சட்டம் - 1972, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் - 1948, ஊதியம் வழங்கல் சட்டம் - 1936, சம ஊதியச் சட்டம் -1976, மகப்பேறு நலச் சட்டம் - 1961 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்கள் உரிமைகோரல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வசதிகளும் இதில் உள்ளன.

இந்த இணைய தளம் பயனாளிகளுக்கு எளிதான செயல்முறையைக் கொண்டுள்ளதுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் குறை தீர்ப்பின் செயல்திறனை பின்வரும் வழிகளில் மேம்படுத்தியுள்ளது: -

*இணையதளம் மூலம் தாக்கல் செய்தல்: தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தினர் ஆகியோர் கணினி, உமாங் செயலி மூலம் 24 மணி நேரமும் உள்நுழைந்தும் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்றும் தங்கள் சர்ச்சைகளையும் கோரிக்கைகளையும் பதிவு செய்யலாம்.

*கண்காணிப்பு: தொழிலாளர்கள் அவர்களது சர்ச்சைகள்  குறித்தும் உரிமைகோரல்களின் நிலை குறித்தும் இணையதளத்திலேயே கண்காணிக்க முடியும்.

*வெளிப்படைத்தன்மை: குறை தீர்க்கும் செயல்முறையின் போது வழங்கப்படும் அனைத்து அறிவிப்புகளும் பிற ஆவணங்களும் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன.

*விரைந்து தீர்வு காணுதல்: வழக்குகளை விரைந்து முடிக்க இணையதள நடைமுறை உதவியுள்ளது.

*கண்காணிப்பு: குறை தீர்ப்பு நிலையைக் கண்காணிப்பதற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க இந்த இணையதளம் உதவுகிறது.

*மேம்பாடு: சமாதான் தளத்தில் அவ்வப்போது உள்ள அம்சங்களும் சேவைகளும் பயனர்களின் தேவைக்கேற்ப மேம்படுத்தப்படுகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2038690)

***


(Release ID: 2038973) Visitor Counter : 58


Read this release in: English , Hindi , Hindi_MP , Punjabi