பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து 5 நாள் பயிற்சி முகாமை சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 30 JUL 2024 11:44AM by PIB Chennai

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் நிர்வாகம் குறித்த 5 நாள் பயிற்சி முகாமை சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் நடத்துகிறது. 2024 ஜூலை 29 அன்று தொடங்கிய இப்பயிற்சி முகாம்  ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 11 மாநிலங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் இணை இயக்குநர், உதவி இயக்குநர், முதன்மை செயல் அதிகாரி, திட்ட இயக்குநர், ஆணையர்கள் நிலையிலான 19 உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.  இது தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறையில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கான 5 நாள் பயிற்சி முகாம் ஆகும்.

மின் நிர்வாகத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பொதுச் சேவை வழங்கலுக்கு சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவதற்குத் தேவையான திறன்களுடன் அவர்களை தயார்படுத்துகிறதுஇப்பயிற்சி முகாமில் தொடக்கவுரை ஆற்றிய சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை செயலாளருமான திரு வி சீனிவாஸ் பேசிய போது, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமும், சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையமும் இணைந்து முதல் முறையாக நடத்தும் இப்பயிற்சி முகாம் டிஜிட்டல் நிர்வாகத்தில் மாநில திறன் கட்டமைப்பில் சிறந்த நடவடிக்கை என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038846

***

IR/AG/KR



(Release ID: 2038950) Visitor Counter : 27