தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இளம் ஊழியர்கள், தொழிலாளர்களின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது
Posted On:
29 JUL 2024 7:00PM by PIB Chennai
2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படும் குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS- பிஎல்எஃப்எஸ்) மூலம் வேலைவாய்ப்புகள், வேலையின்மை குறித்த தரவு சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலமாஐ உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் 15 முதல் 29 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே மதிப்பிடப்பட்ட வேலையின்மை விகிதம் பின்வருமாறு:
வேலைவாய்ப்பின்மை விகிதம்
*2017-18ம் ஆண்டு - %17.8
*2018-19 - 17.3%
2019-20 - 15.0%
*2020-21 - 12.9%
*2021-22 - 12.4%
*2022-23 - 10.0%
ஆதாரம் : PLFS, MoSPI மற்றும் தொழிலாளர் பணியகம்
நாட்டில் வேலையின்மை விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வரும் போக்கில் உள்ளது என்பதை பிஎல்எஃப்எஸ் தரவு சுட்டிக்காட்டுகிறது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி - நகர்ப்புற விவகார அமைச்சகம், நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்ற இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (PMEGP), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS), பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY), கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் (RSETIs), தீன் தயாள் அந்தோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM), பிரதம முத்ரா திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் விவரங்களை https://dge.gov.in/dge/schemes_programmes
என்ற இணையதளத்தில் காணலாம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
(Release ID: 2038695)
***
(Release ID: 2038925)
Visitor Counter : 70