தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஎஸ்ஐ மருத்துவமனைகளை நவீனமயமாக்குதல்

Posted On: 29 JUL 2024 7:01PM by PIB Chennai

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC-இஎஸ்ஐசி), நாடு முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய பிரசவ வளாகம், பல்வேறு ஆய்வக சேவைகள், அதிநவீன இமேஜிங் சேவைகள், போன்றவை இந்த வசதிகளில் அடங்கும்.

நாட்டில் 105 புதிய மருத்துவமனைகளை அமைக்க இஎஸ்ஐசி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் (ESIC) 10.02.2024 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், இஎஸ்ஐ மருத்துவமனைகள், மருந்தகங்களில் ஆயுஷ் பிரிவுகளை நிறுவுவதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய 12 மாதங்களில் தினசரி சராசரி அலோபதி வெளிப்புற நோயாளிகள் பிரிவில் 150 நோயாளிகளுக்கு மேல் பதிவு செய்துள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்ட மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளை அலுவலகங்களில் ஆயுஷ் பிரிவுகள் நிறுவப்பட உள்ளன. 50 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி ஆயுஷ் மருத்துவமனைகள், தற்போதுள்ள 500 படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ அலோபதி மருத்துவமனைகளில்  அமைக்கப்படும். இவற்றில் 50 படுக்கைகள் ஆயுஷ் பிரிவுக்கு ஒதுக்கப்படும்.

மேலும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்த தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

*புதிய விதிமுறைகளின்படி தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்.

*தொழிலாளர் அரசு ஈட்டுறுதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 70 சதவீதத்திற்கும் அதிகமான படுக்கை வசதிகள் இருந்தால், படுக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் அதிகரித்தல்.

*மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க மாநிலங்களுக்கு நிதி, நிர்வாக சுதந்திரம் கிடைக்கும் வகையில் மாநில தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சங்கங்களை உருவாக்குதல்.

*மாநில தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான திட்ட செயலாக்க திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல்.

உயர் சிறப்பு மருத்துவ சேவைகளைப் பொறுத்தமட்டில், சிறுநீரகவியல், இருதயவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, இரைப்பை குடலியல் சிகிச்சை, முடக்கு வாதவியல், நரம்பியல் போன்ற மருத்துவ வசதிகள் ஏற்கனவே உள்ள சில தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இத்துறைகள் இல்லாத இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கூட்டு செயல்பாட்டின் மூலம் இதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2038697)

***


(Release ID: 2038922) Visitor Counter : 70


Read this release in: English , Hindi , Hindi_MP , Punjabi