பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் மட்டும்தான் கடந்த சில ஆண்டுகளில் எரிபொருள் விலை குறைந்துள்ளது: பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி

Posted On: 29 JUL 2024 8:19PM by PIB Chennai

உலகில் கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ள ஒரே நாடு இந்தியாதான் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த சாதனைக்கு பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய முடிவுகளே காரணம் என்றும் அவர் கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு விரிவாக பதிலளித்த அவர், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு, டீலர்கள் லாபம், எரிபொருள் விலையில் அரசின் கொள்கைகளின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

பெட்ரோல், டீசல் விலை மீதான கட்டுப்பாடு 2010, 2014-ம் ஆண்டுகளில் தளர்த்தப்பட்டதை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எடுத்துரைத்தார். எரிபொருள் விலைகள் அரசால் நிர்ணயிக்கப்படுவதைக் காட்டிலும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுவதே இந்தக் கட்டுப்பாட்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

டீலர்களின் லாபத்தைத் தீர்மானிப்பது என்பது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கும் அவற்றின் டீலர்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் தொடர்பான விஷயம் என்று அவர் விளக்கினார். இந்தியாவில் தற்போது 90,639 சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன எனவும், இதில் 81,000 பொதுத் துறையிலும், 9,000 தனியார் துறையிலும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். டீலர் லாபம் தொடர்பான விஷயத்தில் நியாயமான முடிவை எட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அரசு வசதி செய்து தரும் என அமைச்சர் உறுதியளித்தார்.

இருமு கலால் வரிகளைக் குறைத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது தவிர, பிஜேபி ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைப்பு விலைக் கட்டுப்பாட்டுக்கு மேலும் பங்களித்தது என அவர் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான மதிப்புக் கூட்டு வரி விகிதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைத்த அவர், குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் சில மாநிலங்கள் வரிக் குறைப்புகளுக்கு இணங்கவில்லை என்றும் அதனால் அந்த மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்ந்தே உள்ளது என்றும் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

 

(Release ID: 2038742)

***


(Release ID: 2038904) Visitor Counter : 42


Read this release in: English , Hindi , Hindi_MP , Marathi