சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
என்ஐஇபிஐடி-யும் ஹான்ஸ் அறக்கட்டளையும் இணைந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க புதிய நடமாடும் சிகிச்சைப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளன
Posted On:
29 JUL 2024 8:21PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனமும் (NIEPID -என்ஐஇபிஐடி) ஹான்ஸ் அறக்கட்டளையும் இணைந்து நடமாடும் சிகிச்சை பேருந்து முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன.
நொய்டா, காஜியாபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் ஐந்து நடமாடும் சிகிச்சைப் பேருந்துகளை அறிமுகம் செய்வதன் மூலம் விளிம்புநிலை சமூகங்களில் உள்ள குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நடமாடும் சிகிச்சைப் பேருந்தும், கிட்டத்தட்ட 14,000 குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹான்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் திரு சுதீப் சின்ஹா, என்ஐஇபிடி இயக்குநர் டாக்டர் பி.வி.ராம் குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
(Release ID: 2038746)
***
(Release ID: 2038889)
Visitor Counter : 43