குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு

Posted On: 25 JUL 2024 4:59PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்க குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எனப்படும் எம்எஸ்எம்இ-க்களுக்கு சரியான நேரத்தில் போதுமான நிதி கிடைத்தல், தேவையான தொழில்நுட்பங்கள், பொருத்தமான பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்ய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது.

இது தொடர்பாக அரசு எடுத்துள்ள சில முன்முயற்சிகள்:

*குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 01.04.2023 முதல் குறிப்பிட்ட அளவு பிணையமில்லா கடன்.

*குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் தகுதியான நிறுவனங்களுக்கு வளர்ச்சி மூலதனம் வழங்குவதற்காக சுயசார்பு இந்தியா நிதியத்தின் மூலம் ரூ.50,000 கோடி பங்கு உட்செலுத்துதல்.

*பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ், பண்ணை அல்லாத துறைகளில் புதிய குறுந்தொழில் தொடங்குவதற்கு கடனுடன் இணைந்த மானியம் வழங்கப்படுகிறது.

*கருவி மையங்களின் கீழும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கீழும், எம்எஸ்எம்இ அமைச்சகம் பொது பொறியியல், தானியங்கி கருவிகள், கை கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகன பாகங்கள்மின்னணுவியல் பாகங்கள், ஃபோர்ஜிங் - ஃபவுண்டரி, விளையாட்டு பொருட்கள், தோல் - காலணி பொருட்கள், வாசனை மற்றும் சுவைகள் போன்ற பிரிவுகளில் தொழில்நுட்ப மையங்கள் (TCs) எனப்படும் 18 கருவி அறைகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் தவிர, இந்த மையங்கள் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வழங்குகின்றன.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும்  போட்டித்தன்மையையும் உறுதி செய்யும் அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற திட்டங்கள், சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்க எம்எஸ்இ-கிஃப்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து எரிசக்தி உற்பத்தி, குறைந்த வாயு உமிழ்வுகளை உள்ளடக்கிய தூய்மையான போக்குவரத்து போன்ற திட்டங்கள், பசுமை கட்டடம் போன்ற எரிசக்தித் திறன் திட்டங்கள், மறுசுழற்சி உள்ளிட்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

பொருளாதார வளர்ச்சி, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை இயக்குவதில் எம்எஸ்எம்இ-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கண்ட நடவடிக்கைகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் வளர்ச்சி அடைந்த 2047 என்ற இலக்குக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

-----

PLM/KR/DL


(Release ID: 2038780) Visitor Counter : 53


Read this release in: English , Hindi , Hindi_MP , Telugu